IPL 19வது சீசன் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், வீரர்கள் ஏலமானது வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இன்று (நவ.15), தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிட்டது. அதன்படி ரவீந்திர ஜடேஜா, சாம்கரன், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, அர்ஜுன் டெண்டுல்கர், மயங்க் மார்கண்டே, முகமது ஷமி, டோனோவன் ஃபெரேரா ஆகிய வீரர்கள் அணிகள் மாறியுள்ளனர்.