IPL 2026 தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள பெங்களூரு, குஜராத், ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளுமே ஏற்கனவே தலா ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், இந்த முறை எந்த அணி கோப்பையை வென்றாலும் அது தங்களது 2-வது IPL பட்டமாக அமைந்து புதிய வரலாற்றை படைக்கும். நடப்பு சாம்பியனான பெங்களூரு இன்று (மே 26) நடைபெறும் முதலாவது தகுதி சுற்றில் குஜராத் அணியை எதிர்கொள்ளும் நிலையில், 2-வது முறையாக அரியணை ஏறப்போகும் அந்த வரலாற்று சிறப்புமிக்க அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பல மடங்கு அதிகரித்துள்ளது.