ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஜூன் 03) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண, RCB மற்றும் PBKS ஆகிய அணிகளில் விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் வருகை தந்துள்ளார். இந்நிலையில், இரண்டு அணிகளுக்கும் சப்போர்ட் செய்யும் விதமாக, பெங்களூரு அணியின் ஜெர்சியை அணிந்த அவர், பஞ்சாப் அணிக்காக தலையில் டர்பன் கட்டி மைதானத்திற்கு வந்துள்ளார்.