தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்கள், வேளாண் கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் புதிய பட்டய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடில்களில் தோட்டக்கலை செடிகள் வளர்ப்பு தொழில்நுட்பங்கள், ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி, செயற்கை நுண்ணறிவுடன் வேளாண்மையில் இணைய வழி தொழில் நுட்பங்கள், ஆளில்லா வான்கல தொழில்நுட்பம் ஆகிய பட்டய படிப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படும்.