இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் சாதிக்க விரும்புவோர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் (VSSC) இன்டர்ன்ஷிப்பில் கற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பி.டெக் , பி.இ, எம்.டெக், எம்.இ, பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்.டெக், மற்றும் பி.எச்.டி. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 16 ஆகும். vsscinternship.vssc.gov.in/HRDD_LOGIN/beforelogincontroller என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.