சர்வதேச சந்தையில் இன்று (ஆகஸ்ட் 5) தங்கம் விலை இன்று அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் 67.33 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6,352) உயர்ந்து 4,101 டாலராக விற்பனையாகிறது. அதேபோல், ஒரு அவுன்ஸ் வெள்ளி 2.20 டாலர் உயர்ந்து 59.89 டாலரை எட்டியுள்ளது. இதன் தாக்கமாக இந்திய சந்தையிலும், தங்கம் மற்றும் வெள்ளி விலையில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,200-க்கும், ஒரு சவரன் ரூ.105,600-க்கும் விற்பனையானது.