சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $70.08 (இந்திய மதிப்பில் ரூ.6,646.11) குறைந்து $4,062.64 ஆகவும், வெள்ளி விலை $1.81 குறைந்து $55.78-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,235-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,880-க்கும் விற்கப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.225-க்கு விற்பனையாகிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தங்கம், வெள்ளி விலை கடுமையாக சரிந்து வருகிறது.