சர்வதேச சந்தையில் தங்கம் விலை 34 டாலர்கள் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இன்று 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $34.24 (இந்திய மதிப்பில் ரூ.3,207.94) குறைந்து $3,987.23 ஆகவும், வெள்ளி விலை $0.38 உயர்ந்து $51.61-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,015-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,120-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.200-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம், வெள்ளி விலை மேலும் குறைக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.