சர்வதேச சந்தையில் தங்கம் விலை 59 டாலர்கள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகிறது. இன்று 1 அவுன்ஸ் (28.35 கிராம்) தங்கம் $59.07 (இந்திய மதிப்பில் ரூ.5,532.11) உயர்ந்து $4,125.9 ஆகவும், வெள்ளி விலை $1.47 உயர்ந்து $53.16-க்கும் விற்பனையாகிறது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.13,255-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,040-க்கும் விற்கப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.205-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இருக்கக்கூடும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.