கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க கடந்த அதிமுக, திமுக ஆட்சிகளில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான இடம் பாரதியார் பல்கலை., வளாகத்திலும், மற்றொரு இடத்திலும் உள்ளது. இதற்கான கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.