சர்வதேச விருது வென்ற நானியின் 'ஹாய் நான்னா'

இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடிப்பில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ.72 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதால், நானி நடித்து வெளியான படங்களில் அதிக வசூல் செய்த இரண்டாவது படமாகும். இந்த நிலையில், 'ஹாய் நான்னா' திரைப்படம், ஏதென்ஸ் சர்வதேச கலை திரைப்பட விழாவில் அவர்களின் மார்ச் பதிப்பில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி