58,712 ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இடைக்கால வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்., 17) தாக்கல் செய்த அவர், கடந்த 5 வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் வேளாண்மைத் துறைக்கு ரூ. 1,94,076 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.707 கோடியில் 61,00,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என தெரிவித்தார்.