மலைப்பாங்கான பகுதிகளில் பிரத்தியேகமாக காணப்படும் மலைப்பாம்புகள் சுமார் 7 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது ஆகும். இதில் குள்ள மலைப்பாம்பு என்பது 65 செமீ நீளம் வரையில் வளரும். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் தீவுகள் உட்பட வெப்பமண்டல காடுகளில் மலைப்பாம்புகள் அதிகம் காணப்படும். உலகளவில் 40 வகையான மலைப்பாம்புகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. மலைப்பாம்புகள் மரங்கள், குகைகள், தண்ணீருக்கு அருகில் அதிகம் வாழும்.