மதுரையில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னை கிண்டியில் புற்றுநோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வரும் நிலையில், தென் மாவட்ட மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, புதிய மருத்துவமனை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இடம் கையகப்படுத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.