உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம் திடீரென முடங்கியதால் பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்தியாவிலும் பலர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். டவுன் டிடெக்டர் இணையதளத்தில் 10,000-க்கும் அதிகமானோர் புகார் பதிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா இதற்கான காரணத்தை விளக்கவில்லை. இந்நிலையில், ரெடிட் வலைதளத்தில் ஒருவர் இந்தப் பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளார். அதில், செயலியை மீண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.