மெட்டா நிறுவனம், Spotify-ல் கேட்கும் பாடல்களை நேரடியாக Instagram Notes-ல் பகிரும் அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி, Spotify-ல் ஒரு பாடலைக் கேட்கும்போது, அதை இன்ஸ்டா ஸ்டோரிகளில் பகிரும் ஆப்ஷனுடன், Notes-ல் பகிரும் ஆப்ஷனும் தோன்றும் என தெரிவித்துள்ளது. இது உங்கள் விருப்பமான இசையை நண்பர்களுடன் எளிதாகப் பகிர உதவும். இந்த அப்டேட் பயனர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.