இன்ஸ்டாகிராம் பழக்கம்.. இளம்பெண்ணிடம் 150 பவுன் நகை, ரூ.30 லட்சம் மோசடி

சென்னை திருவொற்றியூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (29) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண், தனது கணவர் பிரிந்து சென்றது உள்பட குடும்பப் பிரச்னைகளை கூறியுள்ளார். ஆறுதல் கூறி வந்த ஹரிகிருஷ்ணன், அந்த பெண்ணிடம் இருந்து சிறுகச் சிறுக 150 சவரன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். பின்னர், கணவருடன் பெண் சேர்ந்தபோது நகை, பணம் குறித்து கேட்டபோது மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண் அளித்த புகாரில் ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕