சட்டவிரோத மது விற்பனை.. தடுக்க தவறிய ஆய்வாளர் சஸ்பெண்ட்

சென்னை திருவொற்றியூரில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருவொற்றியூர் பொறுப்பு காவல் ஆய்வாளராக இருந்த அவருக்கு எதிராக வந்த புகாரை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி