சென்னை: 360° டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ட்ரோன் பிராண்டிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. 50 அடி உயரம் வரை பறக்கும் ட்ரோன்களில் டிஜிட்டல் விளம்பர பலகைகள் பொருத்தப்பட்டு, நிகழ்ச்சிகள், தயாரிப்பு வெளியீட்டு விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. பாரம்பரிய விளம்பரங்களைத் தாண்டி, நினைவில் நிலைக்கும் அனுபவ விளம்பரங்களை வழங்கும் இந்த முயற்சி, விளம்பரத் துறையில் புதிய யுகத்தை தொடங்கியுள்ளது.