தீபாவளி பண்டிகை வரும் 8ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 முன்கூட்டியே வழங்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தவறானது என அரசு தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது தொகையை முன்னதாக வழங்கும் திட்டம் ஏதுமில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கமான நடைமுறைப்படி நவம்பர் மாதத்திற்கான உரிமைத் தொகை, வருகிற 15ஆம் தேதியன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.