ரூ.2,000 தள்ளுபடியில் Infinix 5G போன்.. இன்று முதல் விற்பனை!

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள Hot 70 Pro 5G ஸ்மார்ட்போன் இன்று (செப்.7) முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. 8GB RAM + 128GB சேமிப்பக மாடலின் விலை ரூ.27,999. தேர்வு செய்யப்பட்ட HDFC, Axis, ICICI மற்றும் SBI வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதனால் ரூ.25,999-க்கு வாங்க முடியும். 144Hz டிஸ்பிளே, Dimensity 7100 சிப்செட், 50MP Sony கேமரா, 6,000mAh பேட்டரி, 45W சார்ஜிங் மற்றும் IP68 பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕