இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில் 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி வெற்றியை சுவைத்தது. இதன்மூலம் டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக வென்றுள்ளது.