பாகிஸ்தான், இந்தியாவிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில், தங்கள் நாட்டில் கடுமையான நீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். எனவே, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. முன்னதாக, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதை நிறுத்தும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது தொடரும் என இந்தியா திட்டவட்டமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.