இந்தோனேஷியா நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

இந்தோனேஷியாவின், கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்திலுள்ள புளோரெஸ் தீவில் சில தினங்களுக்கு முன்பு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பல்வேறு கல்வி மற்றும் சுகாதார நிலையங்களும் பொதுக் கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதன் இடிபாடுகளில் சிக்கி 47 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி

✕
✕