டெல்லியில் இருந்து மணிப்பூர் தலைநகர் இம்பால் நோக்கி இன்று (ஜூலை 17) மதியம் புறப்பட்ட இண்டிகோ விமானம் திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. முன்னதாக நேற்று இரவு டெல்லியிலிருந்து 191 பயணிகளுடன் கோவா சென்ற மற்றொரு இண்டிகோ விமானத்தில் நடுவானில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது. அச்சமயத்தில் விமானி 'PAN PAN PAN' என்ற அவசரநிலை வார்த்தையை உச்சரித்தார். தொடர்ந்து அந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிங்கியது.