2025 டிசம்பரில் விமானிகளுக்கான திருத்தப்பட்ட பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்தன. இண்டிகோ நிறுவனம் முன்கூட்டியே திட்டமிடாததால், விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டு, டிசம்பரில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் இண்டிகோ நிறுவனம், பயணிகளுக்கு ரூ. 22.68 கோடி இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.