இண்டிகோ விமான சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு

சென்னை விமான நிலையத்தில் 62 இண்டிகோ விமானங்களின் சேவை இன்றும் (டிச.05) ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்களை இயக்குவதற்கு, விமானிகள், விமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் ரத்து என கூறப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து பற்றி எந்த தகவலும் தெரியாமல் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். கோவையில் இருந்து சென்னை, ஹைதராபாத், டெல்லிக்கு செல்லும் இண்டிகோ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி