டெல்லியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு பாட்னாவுக்குச் சென்ற இண்டிகோ விமானம் (6E 2482) ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அவசரமாகச் சுற்றி வந்ததால், பெரும் விபத்தில் இருந்து தப்பியது. 173 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம், இரவு 9:00 மணியளவில் தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்தை மூன்று முறை சுற்றி வந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யாருக்கும் காயமோ சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.