2024-2025 ஆம் கல்வியாண்டில் "தொல்குடியினர் புத்தாய்வுத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 வீதம் 6 மாதங்களுக்கும், முனைவர் பட்டம்/முனைவர் பட்ட மேலாய்வாளர்களுக்கு மாதம் ரூ.25,000 வீதம் 3 வருடங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு: fellowship.tntwd.org.in