வட்டு எறிதலில் தங்கம், வெள்ளி வென்ற இந்தியர்கள்

ஜப்பானின் ஐச்சி நகோயா நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா 11.66 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரரான ராம்ரதன் சிங் 10.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். ஈரானின் அலிரேசா ஹேமாமி வெண்கலப் பதக்கம் வென்றார்.

தொடர்புடைய செய்தி

✕
✕