செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த திறன்களைக் கற்றுக்கொள்வதில் இந்தியப் பெண்கள் உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. Stanford University வெளியிட்ட ஆய்வின்படி, இந்தியப் பெண்களின் AI திறன் ஊடுருவல் குறியீடு 1.9 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதையடுத்து அமெரிக்கப் பெண்கள் 1.71 புள்ளிகளுடனும், கனடா பெண்கள் 0.97 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தொழில்நுட்பத் துறையில் இந்தியப் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதைக் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.