கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்பட உலகின் டாப் டெக் நிறுவனங்கள் பெரும்பாலானவற்றில் இந்தியர்களே தலைமை வகிக்கின்றனர். தற்போது Apple நிறுவன தலைமை இயக்க அதிகாரியாக (COO), இந்திய வம்சாவளி சபிஹ் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 1966-ல் உ.பி., யில் பிறந்த அவர், பள்ளிப் படிப்பிற்காக சிங்கப்பூர் சென்று பின்னர் USA-ல் குடியேறினார். படிப்படியாக உயர்ந்த அவரை புத்திக்கூர்மை உடையவர் என CEO டிம் குக் பாராட்டியுள்ளார்.