தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில், காயத்திலிருந்து குணமடைந்த சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் மீண்டும் இணைந்துள்ளனர். கில், ஹர்திக் உடன் அபிஷேக், திலக், ஷிவம், அக்ஷர், ஜிதேஷ், சஞ்சு, பும்ரா, குல்தீப் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.