ட்ரம்ப்-ன் வெற்றியால் இந்திய பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கும் நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகியவை தலா 1% உயர்ந்து முறையே 80,267.75 மற்றும் 24,443.95 ஆக உள்ளதுது. BSE-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதனம் முந்தைய அமர்வில் ரூ. 445 லட்சம் கோடியிலிருந்து ரூ. 451 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதனால், முதலீட்டாளர்கள் வெறும் 4 மணிநேரத்தில் ரூ.6 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி