உலகளாவிய பங்குச் சந்தைகளில் காணப்பட்ட உயர்வு மற்றும் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைக்கும் என்ற நம்பிக்கை ஆகிய காரணங்களால் முதலீட்டாளர்கள் அனைத்துத் துறைகளிலும் பங்குகளை அதிகம் வாங்கியதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று வியாழக்கிழமை ஏற்றம் கண்டன. இந்த உயர்வு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. மேலும், தீபாவளி எதிரொலியாக நிப்டி 261, சென்செக்ஸ் 860, பேங்க் நிப்டி 622 புள்ளிகள் உயர்வுடன் நேற்று நிறைவடைந்தன.