ஈரான் உடனான போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு (89.16 டாலர்) காரணமாக, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,135.10 புள்ளிகள் உயர்ந்து 82,241.75 புள்ளிகளிலும், நிஃப்டி 293.30 புள்ளிகள் அதிகரித்து 25,337.95 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.