உள்நாட்டுப் பங்குச் சந்தை இன்று (ஜூலை 31) ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 285.94 புள்ளிகள் அதிகரித்து 81,741.34 புள்ளிகளில் நிறைவடைந்தது. நிஃப்டி 93.85 புள்ளிகள் அதிகரித்து 24,951.15 புள்ளிகளில் நிலைத்து நின்றது. ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுஸுகி, என்டிபிசி மற்றும் பார்தி ஏர்டெல் பங்குகள் அதிக லாபம் ஈட்டின. ரிலையன்ஸ், டாடா மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், மஹிந்திரா மற்றும் மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் நஷ்டமடைந்தன.