அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக, ரூ.90-க்கும் கீழ் சரிந்துள்ளது. இருப்பினும், அமெரிக்கா - இந்தியா இடையே ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்திய ரூபாயின் மதிப்பு மீட்சியடையும் என்று பொருளாதார நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.