மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள மோடி, இன்று (பிப்., 25) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, 'இந்திய கலாசாரத்துக்கு யூதர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தருணத்திலும் இதற்குப் பிறகும் இந்தியா இஸ்ரேலுடன் உறுதியாகவும் முழு நம்பிக்கையுடனும் நிற்கும்' என்று தெரிவித்தார்.