அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம், இந்திய வம்சாவளி மாணவி கேட்ட கேள்வி வைரலாகி வருகிறது. அந்த மாணவி, "அமெரிக்காவில் வெளிநாட்டுக் குடியேறிகள் அதிகமாகிவிட்டதாக எப்போது முடிவு செய்தீர்கள்? எங்கள் இளமையையும், செல்வத்தையும் இந்த நாட்டில் செலவிடச் செய்து எங்களுக்குள் ஒரு கனவை விதைத்தீர்கள். நீங்கள் கேட்கும் தொகையைச் செலுத்தி இங்கே வந்துள்ளோம். எங்களை வெளியேற்றப்போவதாக எப்படி உங்களால் சொல்ல முடிகிறது?" என கேட்டுள்ளார்.