ஆஸ்திரேலியாவில் மசாஜ் செய்வதாக கூறி பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சுமித் சதீஷ் ரஸ்தோகிக்கு 13 ஆண்டுகள் 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 61 பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுத்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.