உலக சாதனை படைத்த இந்திய ராணுவ சரக்கு விமானம்

இந்திய விமானப் படையின் சரக்கு விமானம், கடல் மட்டத்திலிருந்து 13,629 அடி உயரத்தில் அமைந்துள்ள லடாக்கின் நியோமா விமான தளத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி உலக சாதனை படைத்துள்ளது. இந்த ரக விமானம் இவ்வளவு அதிக உயரத்தில் தரையிறங்குவது உலகிலேயே இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. அதிக உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைவதால் என்ஜின் செயல்திறன், விமானத்தின் மேலெழும்பும் திறன் மற்றும் தரையிறக்கம் ஆகியவை பெரும் சவாலாக இருக்கும். இதற்கிடையே இந்திய ராணுவம், விமானத்தை தரையிறக்கியது.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி

✕
✕