பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இன்று (ஆகஸ்ட் 04) பிரிட்டனுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த போட்டியின் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என சமநிலையில் இருந்தன. இதையடுத்து, ஷூட் அவுட்டில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஸ் பல கோல்களை தடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.