ஓமனில் எண்ணெய் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உயிரிழப்பு

ஓமன் கடற்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா படகு மோதி நடத்தப்பட்ட தாக்குதலில், எண்ணெய் கப்பலில் பணியாற்றிய இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்களை ஓமன் கடல்சார் நிறுவனம் பத்திரமாக மீட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் நிகழ்ந்த இந்த தாக்குதல் குறித்து ஓமன் பாதுகாப்பு படையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி