உலகின் 'டாப் 50' பல்கலையில் இந்திய கல்வி நிறுவனங்கள்

பிரிட்டனின் 'குவாக்கரெலி சைமன்ட்ஸ்' தரவரிசையில், சென்னை உட்பட 4 ஐ.ஐ.டி-கள் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவை உலகின் முதல் 50 இடங்களுக்குள் நுழைந்துள்ளன. குறிப்பாக ஐ.ஐ.எம் ஆமதாபாத் மேலாண்மை துறையில் 21-வது இடத்தை பிடித்துள்ள நிலையில், இந்தியாவின் 27 பாடப்பிரிவுகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பொறியியல், மருத்துவம் என பல்வேறு துறைகளில் இந்திய கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ள இந்த அங்கீகாரம், இந்தியாவின் உயர்கல்வியின் சர்வதேச தரத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி