பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹல்

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹல் பாரதிய ஜனதா கட்சியில் இன்று (நவ.21) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பாஜகவின் மறுசீரமைக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவுக் குழுவின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத் துறையைத் தொடர்ந்து அரசியலில் கால்பதித்துள்ள சஹலுக்குக் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕