டி20 தொடரை வென்றது இந்தியா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியது. பிரிஸ்பேனில் இன்று (நவ.8) இரு அணிகளுக்கும் இடையே நடக்கவிருந்த கடைசி மற்றும் 5-வது டி20 போட்டி மழையால் முழுவதுமாக கைவிடப்பட்டது. இதனால், ஏற்கனவே நடந்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்ததால், டி20 தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி