CT2025: வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி, இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சால் 49.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் கில் அதிரடி தொடக்கம் தந்தனர். ரோஹித் ஆட்டமிழந்த பின் நிதானமாக விளையாடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.