'இந்தியா' கூட்டணியை வலுவாக ஒருங்கிணைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூட்டணியின் தலைவராக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த அவர், "மு.க.ஸ்டாலின் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு, பல்வேறு மாநில கட்சிகளை ஓரணியில் திரட்டும் ஆற்றல் கொண்டவர். ராகுல் காந்தியின் கரத்தை பலப்படுத்தவும், பாஜக-விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்கவும் ஸ்டாலினின் தலைமை அவசியம்" என தெரிவித்துள்ளார்.
நன்றி:News18