U19-ல் இந்தியா வெற்றி: "நாட்டிற்கு பெருமை மிக்க தருணம்" - முதலமைச்சர் ஸ்டாலின்

ஜிம்பாவேயில் இன்று (பிப்.6) நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி வென்றது. இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஐசிசி ஆடவர் U19 உலகக் கோப்பையை வென்று, நாட்டிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தை வழங்கிய நமது இந்திய அணிக்கு வாழ்த்துகள். வைபவ் சூரியவன்ஷியின் அற்புதமான இன்னிங்ஸ் பல ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி